திடீரென பற்றிஎரிந்த பயங்கர தீ.. மேம்பாலத்தை சூழ்ந்த இருள் - பரபரப்பு காட்சி
கோவை இருகூர் மேம்பாலத்திற்கு கீழ் கொட்டி வைக்கப்பட்ட குப்பைகளில் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கரும்புகையால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.