காண்போரை கலங்கடித்த கோவையின் தாய் சேய் - மருத்துவர் சொன்ன நிம்மதி செய்தி
மருதமலை அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு பெண் யானை ஒன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் இருந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் இணைந்து யானைக்கு சிகிச்சையளித்தனர். இந்நிலையில், யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கோவை மாவட்ட கால்நடை மருத்துவர் சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும், உடல்நிலை பாதிக்கப்பட்ட யானையின் குட்டிகளும் வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், குட்டிகள் தாய் யானையுடன் இணைந்தவுடன் அவற்றை வனப்பகுதிக்குள் அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.