EVM - சர்ச்சை அதிரடி காட்டிய அதிகாரிகள் - நாம் தமிழர் மீது பாய்ந்த வழக்கு

Update: 2024-04-21 09:22 GMT

கடந்த 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில், நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. இதனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன், ஆதரவாளர்களுடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அவரை கைது செய்த போலீசார், சிறிது நேரத்தில் விடுதலை செய்தனர். இந்நிலையில் மத்திய சென்னை வேட்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட 10 பேர் மீது, தேர்தல் நடத்தை விதிமீறல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்