திமுக பிரமுகரின் மகன் வெளியிட்ட சர்ச்சை வீடியோ - வழக்குப்பதிவு செய்த காவல்துறை

Update: 2024-05-19 15:11 GMT

வேலுர் திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரனின் மகன் சரண், வெங்கடாபுரம் பகுதியில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் பார் போன்று செட் அமைத்து வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதனை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், மகன் சரண் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்