நடுரோட்டில் எம்.எல்.ஏ காரை நிறுத்திய மக்கள்.. பெண்கள் வைத்த முக்கிய கோரிக்கை
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே கல்குவாரியை மூடக்கோரி எம்.எல்.ஏவிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நரசிம்ம பெருமாள் மலையில் 2012ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தனியார் கல்குவாரியால், மடதஹல்லி ஊராட்சியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக வந்த பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்.எல்.ஏ கோவிந்தசாமியின் காரை மறித்து ஏராளமான பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கல்குவாரியை நடத்தி வரும் அதிமுக நிர்வாகி ரத்தினவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.