பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகளும், அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 25 சிற்றுந்துகளும் இயக்கப்பட உள்ளது. இதேபோல அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சென்னை பல்கலைக்கழகம் வரை 3 நிமிட இடைவெளியில் சிற்றுந்துகளும், டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வி.எம்.தெரு வரை 2 நிமிட இடைவெளியில் மொத்தம் 25 சிற்றுந்துகள்ளும் இயக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அன்றைய தினம் காலை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், வாகனங்களில் வரும் நபர்கள் 9.30 மணிக்கு முன்னதாகவே வருகை தரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 9.30 மணி அளவில் வாகன நிறுத்தும் இடங்கள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.