பழிக்குப் பழி.. ரத்தத்துக்கு ரத்தம்.. உடல் தண்டவாளத்தில்..! தலை கோயில் வாசலில்..!பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக் கொலை.. தஞ்சாவூரில் பயங்கர சம்பவம்

Update: 2024-02-16 02:59 GMT

தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர், கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கொலை செய்து, தலையை துண்டித்து, உடலை தண்டவாளத்திலும், தலையை கோவில் வாசல் முன்பாகவும் வீசிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் வெளியே வந்த அவர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த தனது நண்பரை பார்க்க வந்திருந்தார். அப்போது, சிலர் சதீஷ்குமாரை தனியாக அழைத்துச் சென்று, நடுரோட்டில் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசாரின் விசாரணையில் பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள்,

தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் பதுங்கி இருப்பதாக தெரியவந்ததை அடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், டக்லஸ் மணி, முத்துக்குமார், அலெக்சாண்டர், மதன், குருபிரசாத், ஸ்டாலின் உட்பட 8 பேரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்