மழைநீரில் மூழ்கிய பாட புத்தகங்கள்..குருவே தெய்வம் என நிரூபித்த ஆசிரியர்கள்..நெகிழ்ந்த மாணவர்கள்
சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினர். அப்போது 4ம் வகுப்பு படிக்கும் மாரி என்ற மாணவன் ,புத்தகம், நோட்டு உள்ளிட்டவை மழை நீரில் மூழ்கிசேதமடைந்ததாக வருத்தமுடன் தெரிவித்தான். இதையடுத்து அச்சங்கத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட ஆசியர்கள் ஒரு லட்சம் ரூபாய் செலவில் 162 மாணவர்களுக்கு புத்தக பை, நோட்டு புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கினர். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.