மகளுடன் தூங்கிய மனைவி... சத்தம் போடாமல் வந்து கணவன் செய்த பகீர் செயல்

Update: 2024-07-28 11:17 GMT

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் கேஸ் சிலிண்டரை போட்டு கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்...மாறாந்தை பகுதியில் வசித்து வந்த முத்துலட்சுமி, நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது கணவன் கணேசன், மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால், வெளியே கடன் வாங்கியதில் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முத்துலட்சுமி தன் மகளுடன் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கணேசன் முத்துலட்சுமியின் தலையில் கேஸ் சிலிண்டரை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டனர். மேலும், தப்பிச் சென்ற கணேசனையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்