"என்னது ரூ.255 லட்சமா?".. MLAவை லாக் செய்த `Assemly டீம்’.. உடனே பறந்த போன் கால்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர், குப்பைகளை அகற்றாமல் கணக்கு காட்டியதாக சட்டமன்ற உறுப்பினரை கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரன்கோவிலின் குப்பை கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன் தலைமையிலான குழு, குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பது கண்டு எம்.எல்.ஏ-விடம் கேள்வி எழுப்பினர். மேலும், இதற்காகவா 255 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பினர். இதனைத்தொடர்ந்து, நகராட்சி ஆணையரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ, ராஜா., சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவருக்கு விளக்கம் அளித்தார்.