சுட்டெரித்த வெயிலுக்கு ரெஸ்ட்.. தென்னகத்தை குளிர்வித்த கோடைமழை

Update: 2024-04-12 10:35 GMT

சுட்டெரித்த வெயிலுக்கு ரெஸ்ட்.. தென்னகத்தை குளிர்வித்த கோடைமழை

#tenkasi #madurai #dindigul #rain

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், குறும்பலா பேரி, கல்லூரணி, திப்பணம்பட்டி, திரவியநகர், மத்தளம்பாறை, வேட்டைக்காரன் குளம், மேல மெய் ஞானபுரம், ராமச்சந்திர பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மதுரை மாவட்டம் நாவினி பட்டி, கீழையூர், கீழவளவு, தெற்குப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மிதமான மழை பெய்தது.

நெல்லை மாவட்டம் அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்தது. அதிகபட்சமாக பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள சேர்வலாறு அணை பகுதியில் 83 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் திடீர் மழை பெய்தது. நத்தம் பேருந்து நிலையம், சேர்வீடு, வேலம்பட்டி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்தது. வெயிலில் வாடிய பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்