நடுவீட்டில் பிணம்.. நீர்மாலையில் பயங்கரம்.. இறுதிச்சடங்கு செய்தவருக்கு இறுதிச்சடங்கு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சுடுகாட்டிற்கு செல்லும் வழியில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 9 பெண்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாறைபட்டியை சேர்ந்த சமுத்திரபாண்டி என்பவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு, இறுதி சடங்குகள் செய்வதற்காக நீர்மாலைக்கு சென்ற அவரது உறவினர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில், வேலுச்சாமி என்பவர் உயிரிழந்தார்.