நாங்கள் எப்படி எடுத்து கொண்டு போவது..! "எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்க சார்..! சடலத்தை நடுரோட்டில் வைத்து போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்லக்கூடிய பாதையை வேல்சாமி என்பவர் வேலி வைத்து அடைத்துள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், இறந்தவர்களின் உடல்கள் விவசாய நிலத்தின் வழியாகவும், அங்குள்ள கண்மாய் கரை வழியாகவும் மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது நிலத்தில் சாகுபடி செய்துள்ளதாலும், கண்மாய் நிரம்பியுள்ளதாலும் மயானத்திற்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. முதியவர்கள் 2 பேர் உயிரிழந்த நிலையில் மயானத்திற்கு பாதை கேட்டு உடல்களை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்