12 அம்ச கோரிக்கைகளுக்கு அரசாணை வெளியிட கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோஜாக் சார்பில், நாகை அவுரி திடலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி நாமக்கல்லில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆசிரியர்கள் கோஷம் எழுப்பினர்.