நடுரோட்டில் அசால்டாக திரும்பிய டாடா ஏஸ் - நூலிழையில் தப்பிய பைக் - அதிர்ச்சி காட்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கனரக வாகனங்கள் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலர் முறையான ஓட்டுநர் உரிமம் கூட இல்லாமல் வாகனங்களை இயக்குவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனிடையே, டாடா ஏஸ் வாகனம் ஒன்று அஜாக்கிரதையாக திரும்பியபோது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன..