தஞ்சை பசுபதீஸ்வரர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு - மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Update: 2024-04-06 01:59 GMT

திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், பழமையான தஞ்சை பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் முறையாக குத்தகைக்கு விடாததால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை மீட்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறி இருந்தார். இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மனுதாரர் கொடுத்த கோரிக்கையை ஏற்று இதுவரை சுமார் 850 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 150 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருப்பதால் மீட்பதில் சிக்கல் உள்ளதாகவும், விரைவில் காவல்துறை உதவியுடன் மீட்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை பதிவு செய்த நீதிபதி, மீதமுள்ள 150 ஏக்கர் நிலத்தை திருவடைமருதூர் DSP தலைமையில் உரிய பாதுகாப்புடன் மூன்று மாதங்களுக்குள் மீட்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்...

Tags:    

மேலும் செய்திகள்