"சூறாவளி".. வானிலை மையம் சொன்ன அதிமுக்கிய தகவல்

Update: 2024-09-02 11:32 GMT

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரம், அதை ஒட்டிய குமரிக்கடல், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், ஆந்திர கடலோரப்பகுதிகளிலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்... மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக் கடலிலும் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்