வெயிலுக்கு குட்பை.. இடி, மின்னலுடன் வரப்போகும் மழை - வெளியான மேஜிக் தகவல்
திருப்பத்தூரில் அதிகபட்சமாக 41.6 டிகிரி செல்சியசும், ஈரோட்டில் 40 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் நாளை தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 12ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.