இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்துக்கு வந்த கடும் எச்சரிக்கை
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது...