கைது செய்யப்பட்டவர் இறந்தவர் விவகாரம்... நடவடிக்கை எடுத்த மனித உரிமை ஆணையம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
காவல்நிலையம் மரணம் தொடர்பாக மதுரை உதவி ஆணையருக்கு, மனித உரிமைகள் ஆணையம் அபராதம் விதித்ததை ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்றம்
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு உயிரிழந்தார். கைதான சுரேஷ், காவல்நிலையத்தில் தாக்கப்பட்டதால்தான் உயிரிழந்தார் என குறிப்பிட்ட மனித உரிமைகள் ஆணையம், உதவி ஆணையர் வெள்ளதுரைக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிரேத பரிசோதனையின் படி உடலில் ஏற்பட்ட காயங்களால்தான் சுரேஷ் உயிரிழந்ததாக கூறி, மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்துள்ளனர்.