சட்ட விரோத மணல் குவாரி வழக்கு..! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு

Update: 2024-10-19 16:58 GMT

சட்ட விரோத மணல் குவாரி தொடர்பாக அரசு தரப்பு

அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்கா, அரியாறு பகுதியில் நடந்த சட்டவிரோதச் மணல் குவாரிகள் குறித்து விசாரணை நடத்த வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சுடலைக்கண்ணு என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாராணையின் போது, அரசின் அனுமதி பெறாமல், விதிமுறைகளை மீறி மணல் எடுத்தற்கு மணிகண்டன் என்பவருக்கு 16 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் அளித்த புகாரியின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்