ஆடி மாத பவுர்ணமி-அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை- தமிழகம் முழுவதும் திரண்ட பக்தர்கள் கூட்டம்

Update: 2024-07-22 11:19 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பத்து லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்து, முருகப் பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து, மாலை நேரத்தில் முருகப்பெருமான் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வெக்காளியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா நடைபெற்றது. ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் கருப்பசாமி கோயிலில் சக்தி கரகம், பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, கோயில் பூசாரி அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்