தேதி குறித்து சுற்றி சூழ்ந்த மேகம்... அடுத்த ஆட்டத்துக்கு நங்கூரம் போட்ட மழை - இதே நிலை தான்..
அதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதே போல், 31 மற்றும் 1-ஆகிய தினங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைபெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதி, அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும், குறிப்பிட்ட பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.