40 வீடுகள் இடிப்பு..! கண்ணீர் விட்டு கதறும் குடியிருப்புவாசிகள்.. தாம்பரத்தில் பரபரப்பு
40 வீடுகள் இடிப்பு..! கண்ணீர் விட்டு கதறும் குடியிருப்புவாசிகள்.. தாம்பரத்தில் பரபரப்பு
பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் இருந்து அகரம் தென் பகுதி வரை, புறவழிச்சாலை அமைப்பதற்காக, மப்பேடு கலைஞர் நகரில் உள்ள 40 வீடுகளை அகற்றுவதற்கு வருவாய்த் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டன. ஆனால், அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்யாமல் இருந்ததால் சாலை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலை மற்றும் வருவாய் துறையினர், ஜேசிபி இயந்திரம் மூலம் வீடுகளை இடித்து அகற்றினர். அப்போது, குடியிருப்புவாசிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வீடுகளை இடிக்கும் முன்பு மாற்று வீடுகள் வழங்குவதற்கு தங்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை என்று குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டினர். டோக்கன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.