உடல்பருமன் அறுவை சிகிச்சையின் போது புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பு -இன்று வெளியாகும் முக்கிய ரிப்போர்ட்
சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் டாக்டர் இளங்கோவன், டாக்டர் தீர்த்த லிங்கம் தலைமையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ நிபுணர்கள் நான்கு பேர், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இளைஞர் ஹேமச்சந்திரனுக்கு நடந்த சிகிச்சைகள் குறித்தும், அவருக்கு எப்படி அறுவை சிகிச்சை நடைபெற்றது என்பது குறித்து, தனியார் மருத்துவமனையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், சுகாதாரத்துறையிடம் இன்று அறிக்கை அளிக்கப்பட உள்ளது.