"யூடியூப் மூலம் குத்துச்சண்டை பயிற்சி எடுத்துக் கொள்வது தவறான செயல்"

Update: 2024-02-25 10:42 GMT

ஒலிம்பிக்கில் தமிழக வீரர் - வீராங்கனைகள் எத்தனை பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று தமிழக அரசு குறிக்கோளை நிர்ணயிக்க வேண்டும் என்று இந்திய குத்துசண்டை தேர்வாளர் குழு உறுப்பினர் தேவராஜன் வலியுறுத்தியுள்ளார்... சேலம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அவர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்... அப்போது பயிற்சி மையங்கள் ஏற்படுத்தி அரசுப் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அரசு வாய்ப்பு உண்டாக்கித் தந்தால் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு வசதியாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார்... மேலும், யூ டியூப் மூலம் குத்துச்சண்டை பயிற்சி எடுத்துக் கொள்வது தவறான செயல் என்றும் அவர் எச்சரித்தார்..."Taking Boxing Training Through YouTube Is Wrong"

Tags:    

மேலும் செய்திகள்