சூரியனார் கோயில் திருக்கல்யாண வைபவம் - பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள சூரியனார் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் சூரியனார் கோயிலில் ரத சப்தமி பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் ரத சப்தமி விழா தொடங்கியது. விழாவின் ஏழாம் நாளில் உஷா தேவி, சாயா தேவியுடன் சூரிய பகவானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது