கெஜ்ரிவால் எடுத்த அதே ஸ்டேப்... ஆனால்... ஹேமந்த் சோரனுக்கு- இடியை இறக்கிய சுப்ரீம் கோர்ட்

Update: 2024-05-22 15:33 GMT

நிலமோசடி புகாரில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை, அமலாக்கத் துறையினர் ஜனவரி 31இல் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சோரன் தாக்கல் செய்த மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் கடந்த மே 3ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, மக்களவை தேர்தலில் பரப்புரை செய்யவதற்காக இடைகால ஜாமீன் வழங்க கோரியும், கைது செய்யப்பட்டதை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய

கோடைகால விடுமுறை அமர்வு இன்று விசாரித்தது. நிலமோசடி புகார் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை மேல் முறையீட்டு மனுவில் குறிப்பிடவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் குற்றச்சாட்டு பதிவுக்கு பின், கைது செய்யப்பட்டது

நீதிமன்ற நடவடிக்கைக்குள் வந்து விடுகிறது என்றனர். எனவே கைதுக்கு எதிரான, ஜாமீன் கோரிய இந்த மேல்முறையீடு மனுகளை தள்ளுபடி செய்வதாக கூறி தீர்ப்பளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்