புதுச்சேரி சுற்றுலா - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் விஷம் குடித்து தற்கொலை..

Update: 2024-08-10 09:33 GMT

குடும்பத்துடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த தம்பதியின் விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பின்னணி காரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

திண்டுக்கல்லை சேர்ந்த 60 வயது முதியவரான சந்திரசேகர் என்பவர், தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்...

தம்பதியுடன் சேர்ந்து, அவர்களின் 26 வயது மகள் சவுந்தர்யாவும், 24 வயதேயான மகன் சுதர்ஷனும் சடலமாக கிடந்தது விடுதியை உலுக்கி இருக்கிறது...

தங்கியிருந்த விடுதி அறையில் வைத்தே நகை வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை

விடுதியின் செக் அவுட் நேரம் முடிந்தும், குடும்பத்தார் அறையை காலி செய்யாத நிலையில், விடுதி ஊழியர் சென்று அறையை சோதனையிட்ட போது இந்த கோரம் தெரியவந்திருக்கிறது...

கடந்த 7 ஆம் தேதி இரவு புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தார், புதுச்சேரியில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தும், சம்பவத்தன்று கோயிலுக்கு சென்று விட்டும் திரும்பிய நிலையில், அவர்களின் இந்த விபரீத முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

தற்கொலை செய்து கொண்ட சந்திரசேகர், ஒரு தங்க நகை வியாபாரி..

Tags:    

மேலும் செய்திகள்