- விசைத்தறித்தொழிலில் கிடைத்த வருமானம் குடும்சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகேயுள்ளது மலையம்பாளையம் பகுதி... மரங்களுடன் பசுமை நிறைந்திருக்கும் இந்த வீட்டில் தற்போது துக்கம் சூழ்ந்தது. மனைவி பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
- சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த ஆய்வு அறிக்கையில் வெளிவந்த தகவல் காவல்துறையை அதிரவைத்தது.
- ஆம், நடந்தது தற்கொலை அல்ல கொலை.
- கொல்லப்பட்டவர் சுந்தர்ராஜ். 32 வயதாகிறது. மலையம்பாளையத்தை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி நிவேதா என்ற மனைவியும் 7 வயதில் மகனும் உள்ளனர். விசைத்தறித்தொழில் செய்து சுந்தர்ராஜன் குடும்பத்தை கவனித்து வந்திருக்கிறார்.
- இந்த சூழலில்தான் அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
- வீட்டுக்குள் கொலை நடந்திருப்பதால் சுந்தர்ராஜனின் மனைவி நிவேதாவிடமிருந்தே விசாரணை தொடங்கியிருக்கிறது.
- அதில்தான் மனைவியே கணவரை ஸ்கெட்ச்போட்டு காலிச் செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
- பத்தை நடத்த போதுமானதாக இல்லை. இதனால் கணவரின் கஷ்டத்தை பகிர்ந்துகொண்ட நிவேதா உள்ளூரிலேயே தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அங்கு பல வருடங்கள் கழித்து பள்ளி தோழி வித்யா என்பவரை சந்தித்திருக்கிறார் நிவேதா. அவர் மூலம் தினேஷ் என்பவர் அறிமுகம் ஆகியிருக்கிறார்.
- அந்த அறிமுகம் நாளடைவில் தகாத உறவாக மாறியிருக்கிறது. தினேஷூம் நிவேதாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
- இந்த ரகசிய காதல் விவகாரம் சுந்தர்ராஜூக்கு தெரியவந்திருக்கிறது. மனைவியை கடுமையாக கண்டித்து வேலையிலிருந்து நிறுத்தியிருக்கிறார்.
- கள்ளக்காதலுக்கு கணவர் தடை போட்டது நிவேதாவுக்கு கொலை வெறியை தூண்டியிருக்கிறது. கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவரை தீர்த்துகட்டிவிட்டு தினேஷோடு குடும்பம் நடத்த திட்டம்தீட்டியிருக்கிறார் நிவேதா.
- சம்பவத்தன்று சுந்தர்ராஜுக்கு உணவில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து மயக்கமடையச் செய்திருக்கிறார் நிவேதா.
- பிறகு கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து தலையணையால் முகத்தை அழுத்தை கணவரின் மூச்சை நிறுத்தியிருக்கிறார்.
- கொலையை தற்கொலை போல சித்தரிக்க, சடலத்தை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகம் ஆடியிருக்கிறார் நிவேதா.
- நடந்த கொலைக்கு நிவேதாவின் தோழி வித்யா மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
- இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், நிவேதா, தினேஷ், வித்யா மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.