திடீரென சூழ்ந்த கருமேகம்...புரட்டி எடுத்த கனமழை - பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2வது நாளகை மழை பெய்தது. ஆரப்பாளையம், ஜெய்ஹிந்த்புரம், சிம்மக்கல், தல்லாகுளம், அண்ணாநகர், நரிமேடு, மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, வாலாஜாபேட்டை, கலவை, விஷாரம், ரத்தினகிரி, அம்மூர், சோளிங்கர், நெமிலி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. திடீரென்று கருமேகம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், ஜவஹர்பஜார், கோவை சாலை, வேலுச்சாமிபுரம் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரமாக மழை கொட்டி தீர்த்தது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. ராயகிரி, அருளாச்சி, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்தது. இடைவிடாது கொட்டிய மழையால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்