புதிய பாலத்தில் தோன்றிய திடீர் பள்ளம் - அதிர்ச்சி மக்கள் | Virudhunagar
புதிய பாலத்தில் தோன்றிய திடீர் பள்ளம் - அதிர்ச்சி மக்கள்
விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியில் பொது பயன்பாட்டிற்கு வந்து 2 நாட்களேயான புதிய பாலத்தில் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கூமாப்பட்டி பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்ல முடியாத நிலை இருப்பதாக வேதனை தெரிவித்த அப்பகுதி மக்கள், கட்டுமான பணியின் போது இந்த பாலம் இடிந்து விழுந்ததாக தெரிவித்தனர். தரமற்ற முறையில் பாலம் அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.