அதிமுக மாஜி வீட்டில் திடீர் ரெய்டு.. 15 மணி நேரம்..25 டாக்குமெண்ட்ஸ் - ரவுண்டு கட்டிய அதிகாரிகள்
கள்ளக்குறிச்சி தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு மற்றும் அவரது தந்தை ஐயப்பா ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்றைய தினம் சோதனை நடத்தினர். சுமார் 15 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனை, இரவு 9:35 மணிக்கு நிறைவுபெற்றது. அதிகமாக சொத்து சேர்த்ததாக பிரபுவின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதன் பேரில் இந்த சோதனை நடைபெற்றது. 9 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில், முன்னாள் எம்.எல்.ஏ பிரவுவின் வீட்டில் இருந்து வழக்கு தொடர்பான 25 முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது