வெற்றி பெற்ற பெண் ஊராட்சித் தலைவர் - பதவி பிரமாணம் எப்போது? - கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Update: 2023-10-07 06:28 GMT

சட்ட சிக்கல் தீர்ந்த பிறகு நாயக்கேனரி ஊராட்சி மன்ற தலைவராக அறிவிக்கப்பட்ட பட்டியலின பெண்ணுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நாயக்கேனரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், பட்டியலினத்தவர் யாரும் இல்லை என்றும், இட ஒதுக்கீடு செய்த‌தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, தேர்தலை மக்கள் புறக்கணித்தனர். ஆனால், நாயக்கேனரி காமணூர் தட்டு கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் திருமணம் செய்துகொண்ட இந்துமதி என்பவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்தும், அவர் பதிவியேற்க தடை விதிக்க‌க்கோரியும், கிராம மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்துமதி உள்ளிட்டோருடன் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்துரையாடினார். இந்த வழக்கு தொடர்பான சட்ட சிக்கல்கள் தீர்ந்த பிறகே பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்