வெறிநாய் கடித்து சிறுவன் இறந்த ஈரம் காய்வதற்குள் மீண்டும் நடுங்கவிட்ட சம்பவம்..
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒரே நாளில் ஒரு குழந்தை உள்பட 2 பேரை வெறிநாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த டேனியல் என்பவரது 4 வயது மகன் ஜெஃப்ரின் வீட்டின் எதிரில் விளையாடி கொண்டு இருந்த போது வெறிநாய் கடித்துள்ளது... பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்... அதே நாய் அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரையும் கடித்து விட்டு அங்கிருந்து ஓடியுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் உலா வரும் இதுபோன்ற வெறிநாய்களைப் பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.