புரட்டி எடுத்த புயல்..பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்..நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Chennai
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால், சென்னை முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக வழக்கறிஞர் சூரியபிரகாசம், சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அப்போது பேசிய அவர், கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது, தனது மனுவின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்ததாகவும், அந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக ஜனவரி மாதம் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.