புதுக்கோட்டை அருகே வடவாளம் கதுவாரிப்பட்டி அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். தீபாவளியை யொட்டி, நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கலியமூர்த்தி மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கலியமூர்த்தி தலையில் கல்லால் பயங்கரமாக தாக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கலியமூர்த்தியுடன் மது அருந்திய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.