தமிழ்நாட்டில் முத்திரை தாள் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, முத்திரை தாள் கட்டணம் 10 மடங்கு முதல் 33 மடங்கு வரை உயர்த்தப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நிர்வாக திறமையின்மையால் திமுக ஆட்சியில் நிதி நிலைமை நிலைகுலைந்துள்ளதாக விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, கட்டண உயர்வு மூலம் மக்களின் தலையில் பெரும் சுமை ஏற்றப்படுவதாகக் கூறியுள்ளார். பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள முத்திரை தாள் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி வழிகாட்டு மதிப்பையும் முன்பிருந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.