நாகை டூ இலங்கை... இணைத்த `சிவகங்கை'... துவங்கியது புதிய பயணம்- மக்கள் உற்சாகம்

Update: 2024-08-16 12:01 GMT

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இருப்பினும், செரியாபாணி என பெயரிடப்பட்ட இந்த கப்பல் போக்குவரத்து சேவை சில நாட்களில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சிவகங்கை என பெயரிடப்பட்ட புதிய கப்பல் போக்குவரத்து, நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு இன்று தொடங்கியது. முதல் நாளில் இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட 44 பேர், உற்சாகத்துடன் பயணித்தனர். சாதாரண கட்டணமாக 5 ஆயிரம் ரூபாயும், பிரீமியம் இருக்கை கட்டணமாக 7 ஆயிரத்து 500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்த சேவையை புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாகை எம்.பி. செல்வராஜ், நாகை ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்