மாமனாரை கொடூரமாக கொன்ற மருமகன் - தர்மபுரியில் பயங்கரம்

Update: 2023-10-04 16:18 GMT

தருமபுரி அருகே குண்டலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். மதுபோதைக்கு அடிமையான இவர், தனது மனைவி யசோதாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான யசோதா, கோபித்துக்கொண்டு தனது தந்தையான அம்மாசியின் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவியை குடும்பம் நடத்த அனுப்பி வைக்குமாறு ரமேஷ் வற்புறுத்திய நிலையில், மாமனார் அம்மாசி அதற்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், அம்மாசி காவலாளியாக பணியாற்றும் இடத்திற்கு சென்று அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமேஷ் சரமாரியாக தாக்கியதில், அம்மாசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பிறகு, காவல்நிலையத்தில் ரமேஷ் சரணடைந்த நிலையில், உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்