படுகொலை செய்யப்பட்ட கட்சி நிர்வாகி... உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உறைந்து நின்ற சீமான்

Update: 2024-01-27 06:20 GMT

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கில், குற்றவாளிகளை கைது செய்யாமல் காவல்துறை மெத்தனம் காட்டுவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார். குமரி மாவட்டம் மைலோடு பகுதியில் கொலை செய்யப்பட்ட சேவியர் குமார் வீட்டுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றார். அங்கு, சேவியர் குமாரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய அவர், பின்னர், உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றவாளிகளை கைது செய்யாமல் காவல்துறை மெத்தனம் காட்டுவதாகவும், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்