கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தனியார் பள்ளியில் என்.சி.சி முகாம் நடத்தி சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரத்தில் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, எலி மருந்து உண்டு தற்கொலைக்கு முயன்ற அவரை, போலீசார் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல், மேஜிஸ்டிரேட் முன்னிலையில் ஒரு மணி நேரம் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே நேரத்தில், விபத்தில் உயிரிழந்த சிவராமனின் தந்தை அசோக் குமாரின் உடலும் உடற்கூராய்வுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருவரது உடல்களும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி பாளையத்தில் அடக்கம் செய்யப்பட்டன.