பட்டாசு ஆலையில் விழுந்த இடி... நொடியில் கருகிய உடல் - சிவகாசியில் அதிர்ச்சி சம்பவம்
சிவகாசி அருகே செவலூரில் பட்டாசு ஆலையை இடி மின்னல் தாக்கியதில் பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்...
கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீபாவளிக்காக பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது, திடீரென இடி, மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட தீ விபத்தில் குளோரைட் ரசாயன மூல பொருட்களை கையாளும் பணியில் ஈடுபட்ட காந்தியம்மாள் என்ற 73 வயது பெண் தொழிலாளி பலத்த தீக்காயமடைந்தார். 100 சதவீத தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காந்தியம்மாள் இன்று உயிரிழந்தார்.
விபத்து குறித்து ஆலை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.