மாணவர்களை ரூமில் அடைத்து போலீசை ஏவி துடிதுடிக்க கொடுமை படுத்திய பள்ளி - சாட்சியாக சிவந்த காயங்கள்

Update: 2024-08-23 07:24 GMT

மாணவர்களை ரூமில் அடைத்து போலீசை ஏவி துடிதுடிக்க கொடுமை படுத்திய பள்ளி - அழியா சாட்சியாக நிற்கும் சிவந்த காயங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.....

போலீசாரால் தாக்கப்பட்ட பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட லத்தி தாக்குதல்...

மாணவர்கள் கூறிய பகீர் வாக்குமூலங்கள் ....

என்ன நடந்தது ..?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்

சம்பவத்தன்று வகுப்பு இடைவேளை நேரத்தில் 11 ம் வகுப்பு மாணவர்கள் கூச்சல் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மாணவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினரை அழைத்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட மாணவர்களைத் தனி அறைக்கு அழைத்துச் சென்ற ஆசியர்கள் ...அங்கு போலீசாரை வைத்து மாணவர்கள் மீது லத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது

மேலும் உச்சபட்சமாக போலீசார் மாணவர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து சுட்டுவிடுவதாக மிரட்டியதாக மாணவர்கள் தெரிவிக்க பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக விளக்கமளித்த மாவட்ட எஸ்பி, மாணவர்கள் வகுப்பறைக்குள் பிரச்சனைகளில் ஈடுபட்டதாகவும், அவர்களை காவலர் அய்யனார் மற்றும் லிங்கபிரவு கண்டித்து இருக்கின்றனர். ஆனால் துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டவில்லை என தெரிவித்து இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்கள் வெளியிட்ட வீடியோ காட்சிகள் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்