சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மழை மற்றும் சூறைக்காற்றால் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான செவ்வாழை மரங்கள் ஒடிந்து விழுந்ததால் விவசாயி அழுது புலம்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரணிபட்டி கிராமத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், கேரளாவில் இருந்து 2 ஆயிரத்து 600 செவ்வாழை வீரிய ரக நாற்றுகளை வரவழைத்து பயிர் செய்து வந்துள்ளார். 10 மாதங்களாக இரவை பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு வளர்த்து வந்த நிலையில், பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தததால் செவ்வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்தன. இதைக் கண்டு வேதனை அடைந்த விவசாயி அப்துல் காதர், அழுது புலம்பியது சோகத்தை ஏற்படுத்தியது.