வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட தவறிய பெண்.. வீட்டிற்கு வந்து அத்துமீறிய நிதி நிறுவன ஊழியர்கள்

Update: 2024-10-30 02:35 GMT

வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட தவறிய பெண்.. வீட்டிற்கு வந்து அத்துமீறிய நிதி நிறுவன ஊழியர்கள்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கடனை திருப்பி செலுத்தாதவரின் வீட்டில் இருந்து பியூஸ் கேரியரை நிதி நிறுவன ஊழியர்கள் பிடுங்கி சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளையான்குடியில் உள்ள செந்தமிழ் நகரில் வசித்து வரும் மேரி என்பவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி, குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த சில மாதங்களாக அவர் கடன் தவணைகளை சரியாக செலுத்தவில்லை. இதனால் அவருடைய வீட்டுக்கு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அடிக்கடி வந்து கடன்தொகையை திருப்பிக் கேட்டு மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டனர். இந்நிலையில், மீண்டும் அவர்கள் வந்தபோது, மேரி சில நாட்கள் அவகாசம் கேட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள், மேரியின் வீட்டில் இருந்த பியூஸ் கேரியரை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் கோபமடைந்த அக்கம் பக்கத்தினர், அவர்களிடம் தட்டிக்கேட்டபோது, அவர்கள் கண்டுகொள்ளாமல் சென்று விட்டனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து இளையான்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்