நாளை நடக்கவிருக்கும் கண்டதேவி கோயில் பிரம்மாண்ட தேரோட்டம்

Update: 2024-02-11 01:55 GMT

சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் தொடர்பாக, 1998 ஆம் ஆண்டு முதலே இரு தரப்பினரிடையே பிரச்சனை இருந்து வருகிறது. இதனால், 4 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டும், வெள்ளோட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்தசூழலில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுபடி, நாளை தேரின் வெள்ளோட்டம் நடைபெறவுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் தேரை இழுக்கவுள்ள நிலையில், பொதுமக்கள் தடுப்பு வேலிகளுக்கு வெளியே நின்று, வெள்ளோட்டத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைமுன்னிட்டு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்