சிவகங்கை கலவரம்.. போலீஸ் மேலேயே கை வைத்த கொடூரம்.. பரபரப்பு தீர்ப்பு

Update: 2024-10-26 09:16 GMT

சிவகங்கை கலவரம்.. போலீஸ் மேலேயே கை வைத்த கொடூரம்.. பரபரப்பு தீர்ப்பு

சிவகங்கை அருகே நடைபெற்ற தேரோட்டத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில், 31 ஆண்டுகளுக்கு பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 1993 ஆம் ஆண்டு திருப்புவணம் புஷ்பவனேஸ்வரர் செளந்தரநாயகியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறவிருந்தது.

அதற்கு முன்னதாக கிராம மக்கள் சார்பில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிகளவில் கூட்டம் கூடியதால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதில் ஆத்திரத்தில் இருந்த ஒரு கோஷ்டியினர், காவல்துறையினரிடம் மோதலில் ஈடுபட்டதுடன், தேரை நடு சாலையில் நிறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். கலைந்து செல்ல மறுத்ததுடன் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் 31 ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்