காதலனை பிரிக்க முயன்ற உறவுகள் - சாலையில் கட்டிப்பிடித்து அமர்ந்த ஜோடி - கிளைமாக்ஸில் வென்ற காதல்..

Update: 2024-03-27 04:42 GMT

காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகு பாண்டி. இவர் தன் காதலியான கோவையை சேர்ந்த பெண் ஒருவரை பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காரைக்குடியில் வைத்து திருமணம் செய்திருக்கிறார். காதல் திருமணம் செய்துகொண்ட இருவரும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், இதையறிந்த இருதரப்பின் உறவினர்களும் காவல்நிலையத்தில் குவிந்திருக்கின்றனர். இருவரையும் தங்களுடன் வந்துவிடுமாறு மன்றாடி அழைத்த உறவினர்கள், ஒரு கட்டத்தில் இருவரையும் வலுக்கட்டாயமாக தாக்கி இழுத்துச் செல்ல முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், காதலர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி, உறவினர்களுடன் நடுரோட்டில் மல்லுக்கட்டி கத்தி கூச்சலிட்டது பரபரப்பை மேலும் கூட்டியது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இருவரையும் ஏற்றுக்கொள்வதாக கூறி சம்மதம் தெரிவித்த இளைஞரின் வீட்டாரிடம் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு இளம் தம்பதியை அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்