காதை அறுத்து பெண் அணிருந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்த கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் ஒடுவான்பட்டியை சேர்ந்த தம்பதி சின்னையா-சரசு. இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் சின்னையாவைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பின்னர் சுரசுவின் இரு காதையும் அறுத்து அவர் அணிந்திருந்த கம்மலைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாகத் தகவல் கிடைத்த போலீசார் சரசுவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.